சடங்குகளின்‌ கதை

(ந்துமதம்‌ எங்கே போகிறது? பாகம்‌-2)

அஸ்லாயஹாத்மம்‌. மாமாணுக தூத்குகச்சாரியார்‌.

சமர்ப்பணம்‌

உண்மையைத்‌ தேடும்‌ தமிழ்‌ அறிவுலகத்துக்கு!

சுருதி ஸ்மிருதி இதிஹாஸ புராண மீமாம்ஸாத்வாய ஸத்ரவிஸாரத வேதார்த்தரத்னாகர வேதவாசஸ்பதி

மஹோபாத்மாய மஹாமஹோபாத்யாய அக்னிஹோத்ரம்‌ ராமானுஜ தாத்தாச்சாரியார்‌

இந்து மதம்‌ எங்கே போகிறது என்ற தொடர்‌ மூலம்‌ நக்‌ கீரன்‌ வாசகர்களுடன்‌ பேசிக்‌ கொண்டிருந்த எனக்கு. இப்போது இன்னொரு புதிய அவதாரமாய்‌... நக்கீர னின்‌ இணைய தள (81041222௭௩௦௦௭) வாசகர்களு டன்‌ உலகம்‌ தழுவிய அளவில்‌ பேசுவது மிகுந்த சந்‌ தோஷம்‌ அளிக்கிறது. நமது மதம்‌ எவ்வாறு தோன்றி வளர்ந்து வாழ்ந்து வருகிறது என்பதை எனது அறிவைக்‌ கொண்டு அளந்து சொன்ன நான்‌.

இப்போது 'சடங்குகளின்‌ கதை' என்ற பொருளை எடுத்‌ துக்கொண்டிருக்கிறேன்‌.

அதாவது... நமது மதமானது சடங்குகளால்‌ தான்‌ கட்‌ டப்பட்டிருக்கிறது. இன்றும்‌ மக்களிடையே சடங்குகள்‌ சாஸ்வதமாய்‌ இருக்கின்ற காரணத்தால்தான்‌ மதம்‌. தனது தாத்பர்ய தத்வ சக்தியை வைத்துக்‌ கொண்டு ஜீவித்திருக்க முடிகிறது.

ஆனால்‌... இன்றைக்கு பின்பற்றப்படும்‌ சடங்குகளுக்கு காரணம்‌ இருக்கிறதா?... ஏன்‌ இதைச்செய்கிறோம்‌ என பின்பற்றுபவர்கள்‌ தெரிந்து கொண்டுள்ளார்களா?. சடங்குகளை செய்து வைக்கும்‌ பிராமணர்களுக்கே இந்த சடங்கு எதற்கு என்று தெரியவில்லையே”. அதனால்‌... உங்களைச்‌ சுற்றி நீங்கள்‌ செய்கிற, உங்‌ களுக்காக செய்விக்கப்படுகிற சடங்குகளின்‌ காரணங்‌ களை கண்டுபிடிக்கத்தான்‌ இந்த பயணம்‌.

பிராமணன்‌ கடல்‌ கடந்தால்‌ பாவம்‌ என ஒரு கருத்து பிராமண்யத்தில்‌ உண்டு. கடல்‌ தாண்டி வரும்‌ எனது கருத்துக்கள்‌ உங்களை சேர்ந்து உங்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினால்‌... எனது இப்போதைய 100-வது வயதில்‌ எனக்கு மேலும்‌ புண்ணியமே என்ற நம்பிக்கை யில்‌ இப்பயணத்தை தொடங்குகிறேன்‌.

சமீபத்தில்‌ நாவல்பாக்கம்‌ என்கிற ஊருக்கு என்‌ இஷ்ட மித்ர பந்து ஒருவரின்‌ சதாபிஷேகத்துக்காக சென்றிருந்‌ தேன்‌. அப்போது அங்கே என்னை சந்தித்த அநேகரும்‌. "நீர்‌ என்ன நெனைச்சுண்டிருக்கீர்‌? ஹிந்து மதத்தை கேவலப்படுத்துறதுனு முடிவு பண்ணிட்டீரா? அதுவும்‌ நக்கீரன்குற ஒரு பத்திரிகையில இப்படியெல்லாம்‌ எழு தறது அபாண்டம்‌...” என போர்க்கொடி தூக்கினர்‌.

நான்‌ கேட்டேன்‌. “நக்கீரன்‌ யார்‌? போக்கிரியா?... ஜன விரோதியா?... அவன்‌ ஜனங்களுக்கெல்லாம்‌ உண்‌ மைய எடுத்துச்‌ சொல்றான்‌. நான்‌ புஸ்தகங்கள்ல நம்ம முன்னோர்கள்‌ எழுதின விஷயத்தைதான்‌ எடுத்துச்‌ சொல்றேன்‌. நக்கீரன்ல அதை எழுதறா... இதுல என்‌ னடாதப்பு இருக்குனு கேட்டேன்‌.

பேசாம வாயை மூடிண்டு போயிட்டானுங்க. நக்கீரன்‌ பத்‌ திரிகையின்‌ எடிட்டர்‌ என்னைப்‌ பார்க்க அவரது தம்பி களோடு வந்திருக்கார்‌. அப்போது அவர்கிட்ட சொன்‌ னேன்‌.

மத்தவன்‌ சொல்ல பயப்படற விஷயங்களை நீ சொல்றே... ரொம்ப தைரியமா சொல்றே. நான்‌ உனக்கு ஹெல்ப்‌ பண்றேன்‌ அவ்வளவுதான்‌. நீ மகாபுருஷன்னு அவருக்கு ஆசீர்வாதம்‌ செஞ்சேன்‌.

உண்மை அதுதான்‌. நக்கீரன்‌ பத்திரிகையில்‌ என்‌ கருத்‌ துக்கள்‌ தொடர்ந்து வந்தபோது... பலபேர்‌ என்னை மிரட்டினார்கள்‌. பகவானும்‌, நக்கீரனும்‌ சேர்ந்து என்னை தைரியப்படுத்தினார்கள்‌.

வேதம்‌ சொல்கிறது சத்யம்தான்‌ பிரதானம்‌ என்று. நான்‌ சத்யத்தை சொல்கிறேன்‌.

இதற்கு கருத்துக்குக்‌ கருத்து என எதிர்ப்பு தெரிவிக்‌ காமல்‌ சிலர்‌ என்னை தனிப்பட்ட முறையில்‌ விமர்சனம்‌. செய்கிறார்கள்‌.

நான்‌ நேருஜியோடு பழகியுள்ளேன்‌. காந்தியாரோடு பழ கியுள்ளேன்‌. மகா பெரியவர்‌ சங்கராச்சாரியாரோடு பழ. கிமிருக்கிறேன்‌. இதெல்லாம்‌ எனது பாக்யம்‌... மகா பெரியவர்‌... பெண்களை “வருங்காலத்தின்‌ வேர்கள்‌! எனகுறிப்பிட்டார்‌.

அதுபோல... நான்‌ இப்போது உலகம்‌ முழுதும்‌ உள்ள தமிழ்‌ அன்பர்களோடு இப்போது பழகி வருகிறேன்‌. நீங்‌ கள்‌ எல்லாருமே வருங்காலத்தின்‌ வேர்கள்தான்‌.

மத சம்பந்தமான விழிப்புணர்வை பெற்று... வேர்களே நீங்கள்‌ முளைவிட்டு இலை விட்டு பிஞ்சு விட்டு... காய்‌ விட்டு... கனி விட்டு விருட்சமாகுங்கள்‌. லோகத்தை காக்கின்ற விருட்சமாகுங்கள்‌. ஆசிர்வாதம்‌.

(அக்னிஹோத்ரம்‌ ராமானுஜ தாத்தாச்சாரியார்‌)

பதிப்புரை தத்துவப்புதையல்‌

நம்‌ நக்கீரன்‌ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஆன்‌ மீகப்பெரியவர்‌ அக்னி ஹோத்ரம்‌ ராமானுஜ தாத்தாச்சா ரியார்‌ அவர்கள்‌ “சடங்குகளின்‌ கதை' என்கிற கருத்துப்‌ பெட்டகத்தை இந்துமதம்‌ எங்கே போகிறது 2-ம்‌ பாக மாக இங்கே தத்துவ ஆலாபனைகளோடு தமிழுலகத்‌ திற்குத்‌ தருகிறார்‌.

வேத சூட்சுமங்கள்‌ பலவற்றையும்‌ கற்று... இன்று பழுத்த ஆன்மீகப்‌ பழமாய்‌ 2007 ஏப்ரல்‌ 8-ல்‌ நூறு வயதைத்‌ தொடும்‌ தாத்தாச்சாரியார்‌ அவர்கள்‌... காவிரி தீரமான குடந்தையில்‌... ஒரு ஆச்சாரமான வைணவக்‌ குடும்பத்‌ தில்‌ பிறந்தவர்‌.

கேள்விகள்‌ மறுக்கப்பட்ட வைதீகத்திற்குள்‌ அதிரடிக்‌ கேள்விகளை எழுப்பியபடியே வர்ணாசிரமவாதிகள்‌ பலரின்‌ முகமூடிகளைக்‌ கிழித்தவர்‌இவர்‌. வேதாபி மானி களாலும்‌, உண்மையான ஞானமார்க்கத்தினரா லும்‌ மதிக்கப்படும்‌ நம்‌ தாத்தாச்சாரியாரின்‌ அறிவின்‌ வீச்சை... உரிய முறையில்‌ நக்கீரன்‌ “இந்துமதம்‌ எங்கே போகிறது' என்கிற புரட்சித்‌ தொடர்‌ மூலம்‌ வாசகர்‌ பரப்‌ பிற்குக்‌ கொண்டு வந்தது.

இது, நூல்‌ வடிவம்‌ பெற்றபோதும்‌ தமிழ்‌ வாசகர்‌ உல கத்தின்‌ ஏகோபித்த வரவேற்புக்கு ஆளாக... அது இப்‌ போது நவீனமான மூன்றாம்‌ பதிப்பை எட்டியிருக்கி றது. இதுவே தாத்தாச்சாரியாரின்‌ தமிழுக்கும்‌, ஞானத்‌ திற்கும்‌ தத்துவ வழிகாட்டல்களுக்கும்‌ கிடைத்திருக்கிற வெற்றியாகும்‌.

நக்கீரன்‌, சமுதாயம்‌ சார்ந்த விழிப்பையும்‌, அரசியல்‌ சார்ந்த விழிப்பையும்‌, பாலியல்‌ சார்ந்த விழிப்பையும்‌ தொடர்ந்து தந்து கொண்டிருந்த நிலையில்‌ ஆன்மீக ரீதியிலும்‌ விழிப்பை ஏற்படுத்த வேண்டும்‌ என முடிவெ டுத்தபோது.

இனிய தம்பி நக்கீரன்‌ இணையாசிரியர்‌ காமராஜ்‌, "இந்த முயற்சிக்கு பொருத்தமானவர்‌ தாத்தாச்சாரியார்தான்‌” என்று என்னிடம்‌ சொன்னார்‌. இது அபாரத்‌ தேர்வு. 'இந்த அபாரத்தேர்வை வாசகர்கள்‌ தங்களின்‌ ஏகோ பித்த ஆதரவின்‌ மூலம்‌ அங்கீகரித்தார்கள்‌.

காரணம்‌ தாத்தாச்சாரியாரின்‌ பார்வை ஆராதிக்க வேண்டிய அதிரடிப்‌ பார்வையாக இருந்தது தான்‌. ஆன்‌ மீகத்திலும்‌ மதம்‌ சார்ந்த எண்ணங்களிலும்‌ வேதங்களி லும்‌ தத்துவங்களிலும்‌ ஊறிப்‌ போன அவருக்குள்‌... இது

சரியா... அது சரியா என்று அலசி ஆராய்கிற பகுத்தறிவு வேட்கை அதிகமாகவே இருந்தது.

எனவேதான்‌ வேதங்களிலேயே வேண்டாத வேதம்‌ எது? சரியான வேதம்‌ எது? என தைரியமாக அவரால்‌ முடிவெடுத்து அறிவிக்க முடிந்தது.

வேதத்தில்‌ சொல்லப்பட்டவை எல்லாமும்‌ சரி என வாதாடாமல்‌.

"ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதீனாம்‌' என ஸ்த்ரீ எனப்படும்‌ பெண்களும்‌ மனிதர்களில்‌ சூத்திரர்களுக்குச்‌ சமமான கீழோர்கள்தான்‌' என்கிற “மனு' தர்மத்தின்‌ தலையில்‌ "இது வேண்டாத கருத்து என சம்மட்டி அடி வைத்தார்‌. கணவன்‌ இறந்துவிட்டானா? இனி மனைவிக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? ஆகவே அவளையும்‌ உயி ரோடு கணவனின்‌ உடம்போடு சேர்த்து எரித்து விட லாம்‌ என்று பரிந்துரை செய்கிற “சிதா வாரோஹணம்‌ பிரம்மச்சர்யம்‌' என்கிற மனுவின்‌ மனிதாபிமானமற்ற இரக்கமற்ற குரலைக்‌ கண்டு... அதன்‌ குரல்வளையை அழுத்திப்‌ பிடிக்கிறார்‌.

இப்படியாக

பகுத்தறிவாளர்‌ பாசறையே பாராட்டுவிழா நடத்துகிற அளவிற்கு குறிப்பாகச்‌ சொல்வதானால்‌ திராவிடர்‌ கழ கத்தலைவர்‌ மதிப்பிற்குரிய ஆசிரியர்‌ கி.வீரமணி மற்றும்‌ பெரியாரியத்தில்‌ ஊறித்திளைக்கும்‌ நமது அன்பிற்குரிய ஐயா சின்னக்குத்தூசியார்‌ போன்றவர்களே உளமாரப்‌ பாராட்டுகிற அளவிற்கு ஆன்மீகத்தின்‌ மத்தியில்‌ இருந்‌ தபடியே பெரியாரியக்‌ குரலை எதிரொலித்து விழிப்பு ணர்வைத்‌ தந்தார்‌ தாத்தாச்சாரியார்‌. அவரிடம்‌ கேட்‌

கக்‌ கேட்க வேதஞானமும்‌ வெளிச்ச சிந்தனைகளும்‌ வெளிப்பட்டபடியே இருக்கிறது.

அவரே இப்போது இந்த “சடங்குகளின்‌ கதை! மூலம்‌ நம்‌ சமூகத்தில்‌ கடைபிடிக்கப்பட்டு வரும்‌ சடங்குக ளின்‌ உள்ளார்ந்த காரணங்களை ஆராய்ந்து நமக்குத்‌ தெளிவை ஏற்படுத்தும்‌ திருப்பணியைச்‌ செய்திருக்கி றார்‌.

முதுமையின்‌ உச்சத்தில்‌ பார்வைத்‌ திறனும்‌, கேட்‌ கும்‌ திறனும்‌ குறைந்துபோன நிலையில்‌ மெலிந்த குர லில்‌ வலிமையான தகவல்களை தாத்தாச்சாரியார்‌ தர. அதை அப்படியே உள்வாங்கி... பொருள்‌ பிசகாமல்‌ எளிமையாய்‌ அழகாய்க்‌ கட்டுரை வடிவில்‌ நமக்குத்‌ தந்திருக்கிறார்‌ நக்கீரன்‌ உதவியாசிரியர்களில்‌ மிகவும்‌ இளைய தம்பியான ஆரா.

தம்பி ஆரா துடிப்பானவர்‌. அவரே ஒரு சிறந்த கவிஞராக இருப்பதால்‌ தாத்தாச்சாரியாரின்‌ தத்துவங்கள்‌ இவரது. நடையில்‌ மிளிர்கிறது.

இந்துமதம்‌ எங்கே போகிறது' தொடரையும்‌ தாத்தாச்‌ சாரியார்‌ சொல்லச்‌ சொல்ல சுவை குன்றாமல்‌ தந்தவர்‌ இதே தம்பிதான்‌. எனவே தாத்தாச்சாரியாரைப்‌ பாராட்‌ டுகிற இதே நேரத்தில்‌ தம்பி ஆராவையும்‌ நாம்‌ பாராட்‌ டியே ஆகவேண்டும்‌.

இந்த சடங்குகளின்‌ கதைகளுக்கு அபூர்வமான ஓவி யங்களைத்‌ தீட்டிய தூரிகை பிரம்மாக்கள்‌ கரோ, ஸ்யாம்‌, அரஸ்‌ ஆகியோரையும்‌ அவர்களது படைப்புச்‌ சித்திரங்‌ களையும்‌ இந்த நேரத்தில்‌ நெஞ்சாரப்‌ பாராட்டுவோம்‌. அதே போல்‌ நக்கீரன்‌ வேலை நெருக்கடிகளுக்கு மத்‌ தியிலும்‌... இந்த நூலை நேர்த்தியாக அழகியல்‌ உணர்‌

வோடு அன்புத்தம்பி குருசாமியின்‌ வழிகாட்டலின்படி லே-அவுட்‌ மூலம்‌ கட்டமைப்பு செய்து தந்த கணி னித்‌ தம்பி கணேசன்‌... இந்நூலுக்கு அட்டை என்னும்‌ அழகான சட்டை வடிவமைத்த தம்பி மதி ஆகியோர்‌ நம்‌ மால்‌ கைகுலுக்கிப்‌ பாராட்டப்பட வேண்டியவர்கள்‌. இப்‌ படி இந்த நூலுக்கு பல்வகையிலும்‌ ஒத்துழைத்த அத்‌ தனை பேரையும்‌ பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்‌ ளும்‌ இந்த வேளையில்‌.

தமிழ்‌ வாசகப்‌ பெருமக்களாகிய நீங்கள்‌... வழக்கம்‌ போல்‌ இந்த சடங்குகளின்‌ கதைக்கும்‌ மகத்தான வர வேற்பைத்‌ தருவீர்கள்‌ என்கிற என்‌ நம்பிக்கையையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மொத்தத்தில்‌ இந்த நூல்‌ ஒரு தத்துவப்‌ புதையல்‌. அறிவார்ந்த ஆராய்ச்சியின்‌ அற்‌ புதமான ஆலாபனை இன்னும்‌ சொல்வதானால்‌ புத்‌ திக்கே புல்லரிப்பைத்‌ தரும்‌ பூபாளப்‌ படைப்பு. ஆகவே இதனை வாசிக்கும்‌ நீங்கள்‌ உங்கள்‌ எண்ணங்களை எங்களுக்கு எழுதலாம்‌. அன்றும்‌ அன்புடன்‌, நக்கீரன்கோபால்‌

சடங்குகளின்‌ கதை! எப்போதுமே ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறபோது மங்‌ களகரமாகவும்‌... ஸ்திரமாகவும்‌ ஆரம்பிக்க வேண்டும்‌. அப்போதுதான்‌ காரியசித்தி உண்டாகும்‌ என்பது நம்‌ நம்பிக்கையல்லவா?. அதனால்‌ மங்களகரமான கல்யாணத்தில்‌ இருந்து ஆரம்பிக்கலாம்‌.

அம்மிமிதிப்பது! கல்யாணத்தில்‌ எவ்வளவோ சடங்குகள்‌ இருக்கின்றன. ஏன்‌ முதலில்‌ இதை தேர்ந்தெடுத்தோம்‌. ஸ்திரமாக ஆரம்பிக்க வேண்டும்‌ அல்லவா?.

இன்றும்‌ கூட நமது வீடு வாசல்களில்‌... “சொல்ல சொல்ல குத்துக்‌ கல்லாட்டம்‌ உக்காந்திருக்கறதப்‌. பாரேன்‌... என்று சொல்வதைக்‌ கேட்டிருக்கிறோம்‌. இது போல்‌ குடும்பம்‌ குத்துக்கல்லாக ஸ்திரப்பட்டு நிற்க வேண்டும்‌ என்பதற்காகத்தான்‌ இந்த சடங்கு.

அதாவது பெண்ணை நடை நடையாய்‌ அழைத்து வந்து அம்மியொன்று மீது ஏறி நிற்க வைப்பார்கள்‌. உடனே புரோகிதர்‌

"ஆதிஷ்ட இமம்‌ ஆஸ்மானம்‌ அஸ்மே வத்வம்‌ ஸ்திராபவா.

நீ எப்போதும்‌ உன்‌ குடும்பத்தை இந்த கல்லைப்‌ போல ஸ்திரமாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அதாவது சந்தேகப்பட்டு குடும்பம்‌ என்ற கட்டமைப்பு உடைந்து போகாமல்‌ இந்த கல்லைப்‌ போல குடும்பத்தை கெட்டி யாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்கிறார்‌.

இதன்‌ பின்னணி மலைவாழ்‌ பழங்குடியினரிடமிருந்து நமக்குக்‌ கிடைக்கிறது.

அதாவது மலைப்‌ பழங்குடியின மக்கள்‌ ஒவ்வொரு செய்கையின்‌ போதும்‌ ஒரு கல்லின்‌ மீது ஏறி நின்று "இந்த கல்லைப்‌ போல உறுதியாக இக்காரியத்தில்‌ இறங்குகிறேன்‌..." என சங்கல்பம்‌ எடுத்துக்‌ கொள்வார்‌ கள்‌.

இதை கவனித்து பிராமணர்கள்‌... அந்தக்‌ கல்லை தூக்கி கல்யாணத்தில்‌ போட்டார்கள்‌.

மலை மக்களான (1ஈ6/1ன்‌ வழக்கத்தை... கல்யா ணத்துக்கு கொண்டு வந்து விட்டாயிற்று. செங்கல்லை மிதித்தால்‌... வாழ்க்கையும்‌ செங்கல்‌ போலவே உடைய லாம்‌.

அதனால்‌ கருங்கல்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுவும்‌ வீடுகளில்‌ கருங்கல்லுக்கு எங்கேபோவது... அதனால்‌ அம்மியை கொண்டுவரச்‌ சொன்னார்கள்‌.

சட்னி அரைப்பது, குழம்புக்கு உண்டான மசாலா அரைப்பது இவற்றுக்காக பயன்பட்டு வந்த அம்மியைப்‌ பயன்படுத்தி... பிராமணர்கள்‌ மக்கள்‌ தலையில்‌ மிளகாய்‌ 'அரைத்தார்கள்‌. அரைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இதுதான்‌ அம்மி மிதிப்பது என்ற சடங்கின்‌ தோற்றம்‌. அதாவது கல்லை மிதிப்பது தான்‌ இச்சடங்கின்‌ கருத்‌ துரு.

ஆனால்‌... வீடுகளில்‌ கிடைக்கும்‌ கல்‌ அம்மி என்பதால்‌. அம்மிமிதித்தல்‌ ஒரு சடங்காகி விட்டது.

அடுத்து.

அம்மி மிதிக்கிறாள்‌ மணப்பெண்‌. ஏன்‌ எதற்கு? என்‌ றெல்லாம்‌ பார்த்து விட்டோம்‌.

அம்மி மிதிக்கும்போது அவளது பாதாதி அரவிந்தங்க ளில்‌ பணிந்து... பூக்காம்புகள்‌ சற்றே பருத்ததைப்போல அமைந்த அவளது கால்‌ விரல்களை தன்‌ உள்ளங்கை யால்‌ வருடியபடிவே பெருவிரலுக்கு பக்கத்து விரலில்‌ மெட்டியைமாட்டுகிறான்‌ மணமகன்‌.

அப்போது... கல்யாணம்‌ நடத்திவைக்கும்‌ வாத்யார்‌. மாப்பிள்ளையைப்‌ பார்த்து. "நிமிர்ந்து மேல பாருங்கோ. அருந்ததி பாருங்கோ... என மேல்‌ நோக்கி கை காட்டுகி றார்‌.

பையனும்‌ பேந்த பேந்த மேலேபார்க்கிறான்‌.

என்ன அருந்ததி நட்சத்திரம்‌ தெரியுறதா?” என கேட்கி றார்‌ வாத்யார்‌.

"ம்‌... தெரியுதே... என்கிறான்‌ பையன்‌.

அதாகப்பட்டது முகூர்த்தம்‌ 5-530 ஆக இருக்கலாம்‌. 64630 ஆக இருக்கலாம்‌. ஏன்‌ 99.45 ஆக கூட இருக்க லாம்‌. இப்பேர்ப்பட்ட சுபயோக சுப காலைவேளையில்‌. சாதாரண நட்சத்திரமே தெரியாது. பிறகு எப்படி அருந்‌ ததிநட்சத்திரம்‌ தெரியும்‌?

நான்‌ கலந்துகொண்ட கல்யாணம்‌ ஒன்றில்‌ பையன்‌ இதுபோலத்தான்‌ 'அருந்ததி நட்சத்திரம்‌ தெரிகிறது என சொல்லிவிட்டான்‌.

நான்‌... கொஞ்ச நேரம்‌ கழித்து 'ஏண்டாப்‌ பயலே... உன்‌ கல்யாண முகூர்த்தம்‌ 7.30-8.15 விடிந்து 2 மணி நேரத்‌ துக்கும்‌ மேலே ஆகிவிட்டது. சூரியன்‌ வானத்தில்‌ சூப்ப ராய்‌ ஜொலிக்கிறான்‌.

இப்பேர்ப்பட்ட நேரத்தில்‌ உனக்கு அருந்ததி நட்சத்தி ரம்‌ எங்கே தெரிந்தது? எனக்கும்‌ கொஞ்சம்‌ காட்டேன்‌: எனக்‌ கேட்டேன்‌.

அவன்‌... பதறிப்போய்‌ வாத்யார்‌ தெரியுதுனு சொல்லச்‌ சொன்னார்‌. சொன்னேன்‌ என்றான்‌.

'இவனைப்போல பல மாப்பிள்ளைகள்‌ மந்திரம்‌ ஓதும்‌ புரோகிதர்களின்‌ கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்‌. சரிஅருந்ததியார்‌?

உங்களுக்குத்‌ தெரியுமா?

சூரிய வம்சத்து மன்னர்‌ பரம்பரை திலிபன்‌, ரகு, அஜன்‌, தசரதன்‌, ராமன்‌... என புகழ்பெற்றது. பெரும்புகழ்‌ படைத்த சூரியவம்ச மன்னர்‌ குலத்தின்‌ ராஜகுருவான வர்‌ வசிஷ்டர்‌.

இவரது மனைவிதான்‌ அருந்ததி. இரண்டு பேரும்‌ கணவன்‌-மனைவி என்றால்‌ எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்களாம்‌. கற்புக்கரசிக்கு தமிழர்களா கிய நாம்‌ கண்ணகியை காட்டுவதைப்‌ போல... வடக்கத்‌ தியர்கள்‌ காட்டுவதுதான்‌ அருந்ததி. ஆனால்‌... நாமோ கல்யாணத்தன்று கண்ணகியை மறந்துவிட்டு அருந்த தியைபார்க்க ஆசைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. அருந்ததி கற்புக்கரசி என்பதற்கான ஒரு கதையும்‌ இருக்கிறது. பெண்களின்‌ மனோபாவத்தைப்‌ பற்றி அறி வதற்கு இந்திரன்‌. சூர்யன்‌, அக்னி மூவரும்‌ அந்தணர்‌ வேடம்‌ பூண்டு அருந்ததியைப்பார்க்கச்‌ சென்றனர்‌. இவர்களைப்‌ பார்த்த அருந்ததி... மூவரையும்‌ உபசரித்து அவர்கள்‌ கை, கால்‌ தூய்மை செய்து கொள்வதற்கு தண்ணீர்‌ எடுக்கச்சென்றாள்‌.

அப்போது... மூவரும்‌, தேவி, நாங்களே இந்த பாத்தி ரத்தை தண்ணீரால்‌ நிரப்பிக்‌ காட்டுகிறோம்‌. நீ போக வேண்டாம்‌ - என தடுத்தனர்‌.

சரி... அப்படியானால்‌ “எனது பாத்திரத்தை நீங்களே நீரால்‌ நிரப்புங்கள்‌' என்கிறாள்‌ அருந்ததி.

இந்திரன்‌ வந்தான்‌... பிராமணர்களுக்கு பயப்படாமல்‌. தவம்‌, யாகம்‌ முதலியவற்றை ஒருவன்‌ செவ்வனே செய்து என்‌ இந்திர பதவியை இன்னொருத்தன்‌ அடை வான்‌ என்பது சத்தியம்‌ எனில்‌.

இந்தகும்பத்தின்‌ கால்பங்கு நீர்‌ நிரம்பட்டும்‌ - என்றான்‌. உடனே கால்பகுதி கும்பம்‌ நீரால்‌ நிரம்பியது. அருந்ததி முகத்தில்‌ புன்னகை அரும்பியது.

அடுத்து அக்னிதேவன்‌ முன்னே வந்தான்‌. யாகத்தை காட்டிலும்‌ அதிதியை பூசித்து நன்மைளிப்பதில்‌ நான்‌ திருப்தியடைவது சத்தியமாயின்‌ அடுத்த கால்பங்கு தண்ணீரால்‌ நிரம்பட்டும்‌ என்றான்‌.

சொன்னபடியே கும்பத்தின்‌ அடுத்த கால்பங்கு நீரால்‌ நிரம்பியது. அருந்ததி ஆச்சரியப்பட்டாள்‌.

அடுத்து... சூரியன்‌ முன்வந்தான்‌. தீயவர்களால்‌ லோகத்‌. தில்‌ ஏற்படும்‌ தீமைகளை வேதியர்கள்‌ செய்யும்‌ அர்க்ய சம்ஸ்காரங்கள்‌ அகற்றுவது உண்மை என்றால்‌.

மேலும்‌ ஒரு கால்பங்கு நீர்‌ நிரம்பக்கடவது என்றான்‌. இப்போது அருந்ததியின்‌ கும்பத்தில்‌ முக்கால்வாசி நீர்‌ நிரம்பியது.

இன்னும்‌ கால்பகுதி நிரம்பவேண்டும்‌. அது அருந்ததி யிடம்‌ இருக்கிறது. அருந்ததியின்‌ கற்பில்‌ இருக்கிறது. நிரம்பியதா மிச்சம்‌?

அருந்ததியின்‌ கும்பத்தில்‌ முக்கால்வாசி நீரால்‌ நிரம்பி யதை பார்த்தோம்‌. சூரியன்‌, சந்திரன்‌, அக்னி ஆகிய மூன்றுபேரும்‌ அருந்ததியின்‌ கும்பத்தின்‌ முன்‌ நின்று. அவரவர்‌ தங்கள்‌ வைராக்யங்களை வெளிப்படுத்த. ஆளுக்கு கால்பங்கு வீதம்‌ முக்கால்வாசி நிரம்பியது.

கடைசியாக அருந்ததி வந்தாள்‌. அந்த கும்பப்பாத்திரத்‌ தின்‌ முன்‌ நின்றாள்‌. இந்த லோகத்தில்‌ உள்ள பெண்‌ கள்‌ தங்களது ரகசிய ஸ்தானத்தில்‌ அதாவது பிறப்புறுப்‌ பில்‌... வேறு ஆண்களின்‌ தொடர்பு நிகழாமல்‌ என்னைப்‌ போல பார்த்துக்‌ கொள்வார்கள்‌ எனில்‌... அவர்கள்‌ பதி 'விரதை அதாவது கணவனை போற்றுபவர்கள்‌ ஆவார்‌ கள்‌. அவர்களை ஜாக்கிரதையாக காக்க வேண்டும்‌. என்‌ கற்பைப்‌ போல்‌ அவர்கள்‌ கற்பும்‌ காக்கப்பட வேண்‌ டும்‌ என்றால்‌ மீதி பாத்திரமும்‌ நீரால்‌ நிறையட்டும்‌”

என அருந்ததி தன்‌ மெல்லிய வாயால்‌ வல்லிய குரல்‌ எழுப்ப... அந்த கும்பப்‌ பாத்திரத்தின்‌ பாக்கியும்‌ நீரால்‌ நிரம்பியது.

அதாவது அருந்ததி கற்பு நிரம்பியவள்‌ என்பதற்காக. தக்கதைகட்டப்பட்டது.

இன்னொரு சுவாரஸ்யக்‌ கதை, தெரியுமா”... இதுவும்‌ அருந்ததியின்‌ கற்பு பற்றி சிலாகிப்பதுதான்‌.

தட்ஷன்‌ என்னும்‌ மன்னனை ஞாபகம்‌ இருக்கிறதா? பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும்‌.

இந்த தட்ஷன்‌ பிரகதி என்னும்‌ குமரியுடன்‌ கூடிக்‌ கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன்‌ விளை வாக வந்து குதித்தவள்‌ சுவாஹாதேவி.

2]

இவளது இளமையும்‌ அழகும்‌ எடுப்பும்‌ நடையும்‌ நளின மும்‌ எம மகராஜனையே கொல்லத்‌ துணிந்தன. பார்த்‌ தான்‌ எமதர்மன்‌. இவளை விட்டால்‌ தனது அழகு என்‌ னும்‌ அஸ்திரத்தால்‌ என்னையே கொன்று விடுவாள்‌ போல, என மயங்கினான்‌. சுவாஹாதேவி மீது காதல்‌ கொண்டான்‌ எமன்‌.

அதற்காக திட்டம்‌ போட்டான்‌. சுவாஹாதேவியை தன்‌ சக்தியால்‌ எலுமிச்சை பழமாக்கினான்‌. அந்த பழத்தை விழுங்கி தன்‌ வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்‌ டான்‌.

தேவைப்படும்போது வெளியே எடுத்து அவளை அனுப விப்பான்‌. பிறகு விழுங்கி விடுவான்‌.

இப்படித்தான்‌ ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில்‌ உலவவிட்டு கொஞ்சிக்‌ குலவி னான்‌ எமன்‌. இருவரும்‌ காமக்‌ களியாட்டங்களில்‌ கரை புரண்டனர்‌. மோகப்‌ போரின்‌ முடிவில்‌ எமனுக்கு பயங்‌ கர களைப்பு. என்ன செய்தான்‌ அப்படியே நந்தவனத்தி லேயேதூங்கிவிட்டான்‌.

சுவாஹாதேவியோ தன்‌ செழித்த அழகோடு நந்தவனத்‌ தில்‌ தனித்து விடப்பட்டாள்‌. அப்போது அந்த வழியே அக்னிதேவன்‌ நடந்து வர அவனைப்‌ பார்த்துவிட்டாள்‌.

"ஏய்‌ அக்னி இங்கே வா... என்னிடம்‌ சுகத்தைக்‌ குடி எனக்குள்‌ எரியும்‌ மோக நெருப்பை நீதான்‌ தணிக்க முடியும்‌ என அழைத்து அவனை அணைத்து தழுவி தன்‌ ஆவலைதீர்த்துக்‌ கொண்டாள்‌ சுவாஹாதேவி.

சுவாஹா -அக்னி- சுகானுபவம்‌ நடந்து முடிந்ததும்‌ அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள்‌ சுவாஹா. இந்த அக்னி நமக்கு பூரண சுகம்‌ தருகிறான்‌. நாம்‌ இவனை எலுமிச்சைப்‌ பழமாக்கி விழுங்கி விட்டால்‌ வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக்‌ கொள்ள லாம்‌. ஆசைக்‌ கோட்டை தாண்டிக்‌ கொள்ளலாம்‌

திட்டம்‌ போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலு மிச்சை பழமாக்கி விழுங்கி விட்டாள்‌.

இதெல்லாம்‌ நடந்து முடிந்தபிறகு ஆசுவாசமாக விழித்‌ தான்‌ எமதர்மன்‌. சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன்‌ கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சித மாக உட்கார்ந்திருந்தாள்‌.

டக்கென அவளை ஓர்‌ எலுமிச்சை பழமாக்கி முழுங்கி னான்‌ எமன்‌.

சரி இதில்‌ அருந்ததி எங்கே வந்தாள்‌ என கேட்கிறீர்‌

களா?

பொறுமை பொறுமை.

அருந்ததியைப்‌ பற்றி சொல்ல வந்துவிட்டு சுவாஹா என்‌ பவளைப்‌ பற்றியே சொல்லிக்‌ கொண்டிருக்கிறாரே?. ர்‌ என நினைக்கிறீர்கள்தானே.

அப்படி அல்ல... அருந்ததியின்‌ கற்புசக்தியை நிலை நாட்டத்தான்‌ சுவாஹாதேவி கதையே சொல்லப்பட்டி ருக்கிறது.

என்ன பார்த்தோம்‌?.

எமன்‌. சுவாஹாதேவியை அனுபவித்த களைப்போடு நந்தவனத்தில்‌ தூங்கிப்‌ போனான்‌. அந்த நேரம்‌ சுவா ஹாதேவி அக்னி தேவனை தரிசிக்க மோகித்தாள்‌. அக்‌ னியோடு போகித்தாள்‌.

எமன்‌ விழிப்பதற்குள்‌ அக்னியும்‌ சுவாஹாதேவியும்‌ ஆசையோடு ஆலிங்கணம்‌ செய்து முத்தத்தால்‌ பரஸ்‌ பர அபிஷேகம்‌ செய்து கொண்டு... அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர்‌. எமன்‌ தூங்‌ கும்போது இவர்களின்‌ இளமை விழித்துக்‌ கொண்டு விளையாடிக்‌ களித்தது.

எமன்‌ விழித்ததும்‌... ஒன்றுமறியாதது போல்‌ சுவாஹா தேவி... அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி தனக்குள்‌ விழுங்கி விட்டது வரையில்‌ பார்த்தோம்‌.

எமன்‌ விழித்ததும்‌ இளமை ததும்ப நின்ற சுவாஹாதே. வியை வழக்கம்‌ போல்‌ எலுமிச்சை பழமாக்கி தனக்குள்‌ விழுங்கிக்கொண்டான்‌.

சுவாஹாதேவியோ அக்னியை எலுமிச்சைப்‌ பழமாக்கி ஏற்கனவே விழுங்கி விட்டாள்‌. அப்படிப்பட்டவளை எமன்‌ ஒரு பழமாக்கி விழுங்கி விட்டான்‌.

இதனால்‌ என்ன ஆனது?... அக்னி தேவன்‌ சுவாஹாதே விக்குள்‌ சென்று விட்டதால்‌ உலகில்‌ அசாதாரண நிலை ஏற்பட்டது.

தாய்மார்கள்‌ சமைக்க முடியவில்லை. ஏனென்றால்‌ அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால்‌ உலகம்‌ எப்படி இயங்கும்‌.

விஷ்ணுவுக்கு விவரம்‌ தெரிந்தது.

எமன்‌ அசந்த வேளையில்‌... சுவாஹா அக்னியோடு ஆனந்தக்‌ கூத்தாடியதையும்‌... பிறகு எலுமிச்சம்‌ பழ மாக்கி தன்‌ வயிற்றுக்குள்‌ வைத்துக்‌ கொண்டதையும்‌ அறிந்துகொண்டார்‌ விஷ்ணு. இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன்‌ வயிற்றில்‌ இருப்பதையும்‌ அறிந்தார்‌ விஷ்ணு.

எனவே எமனை அழைத்து... “உனக்குள்‌ எலுமிச்சை பழம்‌ போல இருக்கும்‌ சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்‌.

அப்படியே செய்தான்‌.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம்‌... "உன்‌ வயிற்றுக்‌ ள்‌ இருக்கும்‌ அக்னிதேவனை வெளியே விடு' என்‌

சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்‌... அக்னி தேவனை அவனுக்கே மணமுடித்து வைத்தனர்‌. ஆனால்‌... சுவாஹாதேவியை அவள்‌ இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும்‌ அடங்கவில்லை. அழகுப்‌ பதுமையாய்‌ சதைசிற்பமாய்‌ சுவாஹாதேவி காத்‌ திருக்க..அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில்‌ எப்போதும்‌ ஜொலித்துக்‌ கொண்டிருக்கும்‌ ரிஷிகளின்‌ மனைவிக ளோடு குஷியாக இருக்க வேண்டும்‌ என ஆசைப்பட்‌ டான்‌.

இதை தனது மனைவியான சுவாஹா தேவியிடமே சொன்னான்‌.

"அடியேய்‌... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகி விட்டது. சப்தரிஷி மண்டலத்தில்‌ என்றும்‌ இளமையாக இருக்கும்‌ ரிஷிகளின்‌ மனைவிகளோடு தேக ஆனந்தம்‌ கொள்ள துடிக்கிறேன்‌' என்றான்‌.

நான்‌ இருக்க ஏன்டா அவள்களுக்கெல்லாம்‌ ஆசைப்ப டுகிறாய்‌ என்றல்லவா சுவாஹா கேட்டிருக்க வேண்டும்‌.

கேட்டாளா?... இல்லை. பிறகு?... "அப்படியே ஆகட்டும்‌. ஆனால்‌ ஒன்று அந்த ரிஷிகளின்‌ மனைவிகள்‌ போல நானே உருவம்‌ எடுத்து வருகிறேன்‌. நீ அனுபவித்துக்‌ கொள்‌' என்று யோசனை சொன்னாள்‌ சுவாஹா.

சப்த ரிஷிகள்‌ என்றால்‌ ஏழுபேர்‌. இவர்களில்‌ ஒவ்‌ வொருரிஷியின்‌ மனைவியரை போலவும்‌ உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம்‌. கொடுத்து உயிர்‌ நடுங்க உவகையாய்‌ புணர்ந்து பூரித்‌ தான்‌

அக்னி. இன்னும்‌ ஒருத்தி பாக்கியிருக்கிறாள்‌. அவள்‌ தான்‌ வசிஷ்டரின்‌ மனைவி அருந்ததி.

ஆறு ரிஷிகளின்‌ மனைவிகளையும்‌ அனுபவித்தவன்‌, அடுத்து கடைசியாக அருந்தியை அனுபவிக்க தயாராக இருந்தான்‌.

சுவாஹாதேவி தனது சக்தியால்‌ அருந்ததி போல உரு வம்‌ எடுக்க முயற்சித்தாள்‌. ம்ஹும்‌. முடியவில்லை. என்‌ னென்னமோ செய்தாள்‌. ஆனாலும்‌ அருந்ததி போல்‌ அவளால்‌ உருவெடுக்க முடியவில்லை.

ஏனென்றால்‌... அருந்தி கற்புக்கு அரசி.

இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்த தியைபார்த்தபடி... "தேவி... நான்‌ தவறு செய்து விட்டேன்‌ என்னை மன்னிப்பாயாக இனி... அக்னி முன்னிலை யில்‌ நிகழும்‌ ஒவ்வொரு கல்யாணத்திலும்‌... உன்னைப்‌ பார்த்து வணங்கினால்‌ அந்த தம்பதிகள்‌ சுகம்‌, தனம்‌, புத்திரர்களைப்‌ பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்‌" என்று. கூறினாளாம்‌.

அதன்படிதான்‌... இன்னும்‌ கல்யாணத்தின்‌ போது அருந்‌ ததி நட்சத்திரம்‌ பார்க்கிறார்கள்‌.

அது காலை மணி 9.9.45 சூரியதேவன்‌ எரியும்‌ நேர மாக இருக்கும்‌ போதும்‌ அருந்ததி நட்சத்திரம்‌ பார்க்கி நீர்களே எப்படி?.

உங்கள்‌ மனைவியை விட அருந்ததிக்கு கற்பு அதிகம்‌ என நீங்கள்‌ நம்புகிறீர்களா?.

அம்மி மிதித்தாயிற்று. "அருந்ததி! யாரென்று பார்த்தா யிற்று அடுத்து?...கல்யாணத்தில்‌ அம்மி மிதித்து, அருந்‌ ததிபார்த்துவிட்டோம்‌.

இப்போது மணமேடையில்‌ நடக்கும்‌ மந்த்ரச்‌ சடங்குக ளைப்பார்க்கலாமா?.

அதற்குமுன்‌ ஒரு மிகப்பெரிய விஷயத்தைப்‌ பார்த்து விடுவோம்‌. நக்கீரன்‌ இதழில்‌ இந்துமதம்‌ எங்கே போகிறது? தொடரிலே... விவாஹம்‌ என்றால்‌ தூக்கிக்‌ கொண்டு ஓடுவது என்று அர்த்தம்‌ என குறிப்பிட்டிருந்‌ தேன்‌.

ஆனால்‌ கல்யாணம்‌ என்பதற்கு என்ன அர்த்தம்‌ என நான்‌ சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்‌. ஆணையும்‌, பெண்களையும்‌ வளர்த்து அவர்கள்‌ கழுத்‌ திலே பூ வளர்த்து எதிரிலே தீ வளர்த்து... சுற்றம்‌ சொந்‌ 'தங்களையெல்லாம்‌ வளர்த்து தாலி கட்டும்‌ நிகழ்ச்சி. இது புனிதமான மங்களமான திவ்யமான சடங்கு. சமஸ்‌ கிருதத்தில்‌ புனிதமான மங்களமான நல்ல காரியத்‌ துக்கு கல்யாணம்‌ என்று பெயர்‌.

அப்படிப்‌ பார்த்தால்‌ நாம்‌ நல்ல மனதோடு தூய அன்‌ 'போடு அடுத்தவர்க்கு செய்கின்ற உதவிகள்‌ செய்யலாம்‌. அதற்குப்‌ பெயரும்‌ கல்யாணம்‌ செய்வதுதான்‌.

இப்படிப்‌ பார்த்தால்‌ ஒரு மனுஷனோ, மனுஷியோ பிறந்‌ திலிருந்து இறக்கும்‌ வரை தினமும்‌ கல்யாணம்‌ செய்‌ தபடியே இருக்க வேண்டும்‌. அதாவது நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும்‌.

அப்படியென்றால்‌... இப்போது நாம்‌ குறிப்பிடும்‌ கல்யா ணத்துக்கு என்ன பெயர்‌?.

கன்யா வரணம்‌. இதுதான்‌ பெயர்‌. அப்படியென்றால்‌... கன்னிகையைக்‌ கோருவது. அதாவது முன்காலத்தில்‌ பெண்ணோடு சேர்ந்து இல்லற வாழ்வு நடத்தவேண்‌ டும்‌ என விரும்புகிற ஒருவன்‌ தன்‌ குலம்‌, ஒழுக்கம்‌, வயது, குணம்‌, செல்வம்‌ இவைகளுக்கு ஏற்றபடி ஒரு. கன்னிகையைத்‌ தேடி அந்த கன்னிகைக்கு உரியவ ரான தந்த அல்லது முக்கிய உறவினர்களிடம்‌ செல்ல வேண்டும்‌.

"உங்களுடைய கன்னிகையை எனக்கு மணமுடித்துத்‌ தாருங்கள்‌... என வேண்டுகோள்‌ வைக்க வேண்டும்‌. இதற்குப்‌ பெயர்‌ தான்‌ கன்யாவரணம்‌. அதாவது பெண்‌ கேட்பது. இந்த பெண்‌ கேட்கும்‌ சடங்கான கன்யாவ ரணம்தான்‌ பிற்காலங்களில்‌ மருவி மருவி 'கல்யாணம்‌'

என ஆகிவிட்டது என்றும்‌ நாம்‌ நம்ப வாய்ப்புகள்‌ நிறைய இருக்கின்றன.

'இப்போதெல்லாம்‌. பெண்ணை பெற்றவர்‌ தான்‌ அலைந்து திரிந்து மாப்பிள்ளை தேடிக்‌ கொண்டிருக்‌ கிறார்‌. இப்படி மாப்பிள்ளையே தேடிப்பிடித்து மண முடித்தால்‌ அதற்குப்‌ பெயர்‌ கன்யாவரணம்‌ அல்ல. அது காளைவரணம்‌. அதாவது காளையை தேடுவது. இப்போதும்‌... வைதீக முறையில்‌ நடக்கும்‌ “கன்யாவ ரணங்களை பார்த்தால்‌ முதலில்‌ பெண்‌ தேடும்‌ ஐதீகத்‌ துடன்‌ கூடிய மந்த்ரங்களைதான்‌ தொடக்கமாக ஆரம்‌ பிக்கிறார்கள்‌.

பெண்‌ தேடி கண்டுபிடித்து மணமேடையில்‌ உட்கார வைத்தாகிவிட்டது. இனிமேலும்‌ “பெண்‌ தேடவேண்‌ டும்‌. அதற்கு அலைய வேண்டும்‌ என்று பொருள்‌ படும்‌ படியான மந்த்ரங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்‌ வாத்யார்‌

சரி... இனி கல்யாண மந்த்ரச்‌ சடங்குகளை பார்ப்போம்‌.

கல்யாணம்‌ என்றாலே இப்போது நடக்கும்‌ கல்யாணம்‌. மட்டும்‌ அல்ல! “நல்லது செய்தல்‌ என்ற பொதுவான குணத்துக்கு கல்யாணம்‌ என்று பெயர்‌.

ஆனாலும்‌ நமது பேச்சு வழக்கில்‌, எழுத்து வழக்கில்‌ கல்யாணம்‌ என்ற பேரே குடித்தனம்‌ நடத்தி வருகிறது. எனினும்‌, இனி நாம்‌ தமிழில்‌ திருமணம்‌ என்று குறிப்பிடு வோம்‌.

மணமேடையில்‌ பெண்‌ உட்கார்ந்திருக்கிறாள்‌. அக்னி ஹோம குண்டத்தின்‌ அருகே... உட்கார்ந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கும்‌ வாத்யார்‌... வியர்த்து

விறுவிறுத்து தன்‌ வஸ்திரத்தால்‌ உடலெங்கும்‌ துடைத்‌ தபடியேமந்த்ரம்‌ ஓதிக்‌ கொண்டிருக்கிறார்‌.

அதுவும்‌ மணப்பெண்ணை குறிவைத்தபடியே மந்த்ரம்‌ ஒதுகிறார்‌.

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரும்‌ 'அக்னி எதற்கு...? அதனால்‌ புகை தானே வருகிறது... என்று. ஆனால்‌... மனிதன்‌ தன்‌ பாவங்களை தீர்த்துக்‌ கொள்ள. அக்னி தேவனை வழிபட, பாவங்கள்‌ அக்னியிடம்‌ போகும்‌. அப்பாவம்‌... அங்கிருந்து பிராமணனிடத்தில்‌ வரும்‌, பிராமணன்‌ வேதச்‌ சொற்களை வெளியிடுவ தால்‌ அந்த வேதச்‌ சொற்கள்‌ அவனது பாவத்தை தீர்க்‌ கும்‌.

இதற்காகத்தான்‌ அக்னியாம்‌.

சரி... மணமேடையில்‌ பெண்ணை உட்கார்த்தி வைத்து.

'ஜாதகர்மா' என சத்தம்‌ போடுகிறார்‌ வாத்யார்‌. உடனே ஜாதகர்மாவுக்கான ஒரு மந்த்ரத்தை சொல்கிறார்‌. இங்கே நமக்கு மந்த்ரம்‌ தேவையில்லை. என்னத்துக்‌. காக இது என்றால்‌ பெண்‌ பிறந்தபோது ஜாதகம்‌ கணிப்‌ பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சடங்கு.

இதை அப்பெண்‌ பிறந்தபோதே செய்திருக்க வேண்‌ டும்‌. வாத்யாரின்‌ பணத்தேவைக்காக... மணமேடையில்‌ செய்யப்படுகிறது.

அடுத்தது நாமகரணம்‌. இது உங்களுக்கே தெரியும்‌. அதாவது பெயர்‌ சூட்ட வேண்டிய சடங்கு. பெண்ணுக்கு. பெயர்‌ சூட்டி இருபது வருடங்கள்‌ அவளை அப்பா- அம்மா, வாய்‌ நிறைய அழைத்திருப்பார்கள்‌. பள்ளிக்கூ

டத்தில்‌ சேர்த்திருப்பார்கள்‌. அவளும்‌ எவ்வளோ சாத னைகள்‌ செய்து... திருமணப்‌ பத்திரிகையிலும்‌ அவள்‌ பெயர்‌ அச்சடிக்கப்பட்டிருக்கும்‌.

இதெல்லாம்‌ தெரிந்தும்‌... “நாமகரணம்‌' என்னும்‌ ஒரு சடங்கை முட்டாள்தனமாக வாத்யார்‌ நடத்துவார்‌ சில மந்த்ரத்தை ஓதி.

அடுத்தது அன்னப்ராசனம்‌. கேட்டால்‌ உங்களுக்கு சிரிப்பு வரும்‌.

மணமேடையில்‌ வளர்ந்து செழித்து கொழித்து பருவம்‌ எய்தி அமர்ந்திருக்கிற அந்த பெண்ணை சின்னக்‌ குழந்‌ தையாக இருப்பது போல்‌ நினைத்துக்‌ கொள்ளுங்கள்‌. தாய்ப்பால்‌ குடிக்கும்‌ வயது முடிந்த உடன்‌.

கொஞ்சம்‌ சாதத்தை எடுத்து அதில்‌ நெய்‌ போட்டு... அந்‌ தக்குழந்தைக்கு முதன்முதலாக ஊட்டுவார்கள்‌. "இனிமேல்‌... உனக்கு இதுதான்‌ உணவு, வாழ்க்கை முழுதும்‌ இனிமேல்‌ நீ தாய்ப்பால்‌ சாப்பிட முடியாது. உன்‌ முதல்‌ உணவை மெல்ல சாப்பிடு... பலம்‌ பெறு... என பக வானை பிரார்த்தித்துக்‌ கொண்டு அந்த சின்னக்‌ குழந்‌ தையின்‌ அழகிய வாயில்‌ கொஞ்சமாய்‌ குழ குழவென வடித்த சாதத்தை ஊட்டுவார்கள்‌.

இந்த நிகழ்ச்சியைத்‌ தான்‌ அன்னப்ராசனம்‌ என்று சடங்‌ காக்கினார்கள்‌. சரி. இது குழந்தைக்கு பொருந்தும்‌. சாப்பிட்டு தளதளவென வளர்ந்து மணவறையில்‌ உட்‌ கார்ந்திருக்கிறாளே இளம்பெண்‌. நேற்று இரவு வரை திருமண டிபனை மூக்குப்பிடிக்க சாப்பிட்டவள்‌. அவ ளுக்கு... முதல்‌ உணவை ஊட்டும்‌ சடங்குதான்‌ இந்த அன்னப்ராசனம்‌.

இதுவும்‌ வாத்யாரின்‌ வயிறு வளர்க்கவே அன்றி வேறு என்னத்துக்கு?.

அடுத்தது ரொம்ப முக்யமான சடங்கு. பெயர்‌ சூடாகர்மா. மணப்பெண்‌ ஸ்பெஷல்‌ சிகையலங்காரம்‌ பண்ணிக்‌ கொண்டு... ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறாள்‌.

அவளைப்‌ பார்த்து மணப்பந்தலுக்கு அருகே இருக்கும்‌ பெண்கள்‌ பேசிக்‌ கொள்கிறார்கள்‌.

"அதோ பாருடி... பொண்ணுக்கு தலைமுடி எவ்வளவு நீளம்‌?... பாரு... என்ன அழகா அவ இடுப்புக்‌ கீழ தொடையை தட்டி விளையாடுறது பாரு அவ கூந்தல்‌... என ஆச்சரியம்‌ கொட்டினார்கள்‌.

அதில்‌ ஒரு சந்தேக சிகாமணி சொன்னாள்‌. “சவுரி முடியா இருக்கும்டீ.... அதற்கு பதில்‌ கொடுத்தாள்‌. இன்‌ னொரு நிரூபண நங்கை. “இல்லடீ... அவ காலையில்‌ குளிச்சுட்டு வரும்போதே பாத்தேன்‌... இவ்வளவு நீள கூந்தலை துவட்டறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதை... என்றாள்‌.

சரி... மணப்பெண்ணுக்கு தொடை தட்டி விளையாடும்‌. கூந்தல்‌ இருக்கட்டும்‌ நல்லதுதான்‌.

ஆனால்‌... இப்போது வாத்யார்‌ சொல்கிறார்‌ "ஆடாகர்மா' பண்ணணும்‌.

சூடா கர்மா என்றால்‌!

சூடாகர்மா என்றால்‌, பெண்ணுக்கு மொட்டை யடிக்கும்‌. சடங்கு. அடப்பாவிகளா... இப்பேற்பட்ட தொடை தட்‌ டும்‌ கூந்தல்காரி'க்கா மொட்டையடிக்க வேண்டும்‌? வாத்யார்‌ அப்படித்தான்‌ மந்திரம்‌ மட்டும்‌ சொல்கிறார்‌.

சின்ன வயதில்‌ குழந்தைக்கு முதன்முதலாய்‌ முடியிறக்‌ குவது விசேஷமானது. ஒரு வயது ஆன தருவாயில்‌ முதன்முதலாக குழந்தையை தாய்மாமன்‌ மடியில்‌ உட்‌ கார வைத்து மொட்டையடிப்பார்கள்‌, காது குத்துவார்‌ கள்‌. அந்த சடங்கை தான்‌ மறுபடியும்‌ திருமணத்திலும்‌. செய்வது போன்று பாவ்லா செய்கிறார்‌ வாத்யார்‌. உண்‌ மையில்‌ இச்சடங்கை செய்தால்‌ மணப்பெண்‌ மொட்‌ டையோடு பந்தலுக்கு வரவேண்டும்‌. எப்படியிருக்கும்‌ என்று யோசித்துப்‌ பாருங்கள்‌.

இதிலிருந்து என்ன தெரிகிறது வாத்யார்‌ நமக்கெல்‌ லாம்‌ மொட்டையடித்து “காது குத்துகிறார்‌ என்று புரிந்து கொண்டீர்களா.

இதுமட்டுமல்ல.

ஒரு பெண்ணுக்கும்‌ அவள்‌ அப்பாவுக்குமான பாசத்‌ தைக்கூட நமது மதம்‌ சடங்காக்கி வைத்திருக்கிறது. திருமணச்‌ சந்தடியில்‌... சுற்றிலும்‌ வாழ்த்தொலிகள்‌. சாப்பாட்டுப்‌ பந்தி வாசனைகள்‌... இவற்றிற்கிடையே

மணப்பந்தலில்‌... பெண்ணின்‌ அப்பாவையும்‌ அம்மா வையும்‌.

இத்தனை காலமாய்‌ தங்கள்‌ கண்ணின்‌ எல்லையில்‌ பார்த்துப்‌ பார்த்து வளர்த்த தங்கள்‌ பெண்ணை பிரியப்‌. போகிறோமே என்று உணர்வு வாட்டுகிறது.

"முன்பின்‌ தெரியாத ஒரு பிள்ளையிடம்‌ நம்‌ செல்லத்தை ஒப்படைக்கிறோமே... இந்தக்‌ குழந்தை அந்தப்‌ பிள்‌ ளையுடன்‌ நன்றாக வாழ்க்கை நடத்த வேண்டுமே... என்ற வேதனை பெண்ணைப்‌ பெற்ற அம்மாவையும்‌ அப்பாவையும்‌ வாட்டுகிறது.

எவ்வளவு தைரியப்படுத்திக்‌ கொண்டாலும்‌... அவர்க ளையும்‌ தாங்காமல்‌ துக்கம்‌ பீறிட்டு... கண்ணிலிருந்து கண்ணீர்‌ முட்டிக்‌ கொண்டுவருகிறது.

அவர்களே அப்படியென்றால்‌. இதுவரை அறிமுகமே இல்லாத உலகத்தில்‌ வாக்கப்ப டப்போகும்‌ அந்த பருவக்‌ குழந்தைக்கு எப்படியிருக்கும்‌.

"இத்தனை நாள்‌ என்னை பூ போல வளர்த்த அப்பா வையும்‌, அம்மாவையும்‌, உடன்பிறந்தவர்களையும்‌ நான்‌

பிரிய நேரிடுகிறதே...' என அந்த மணக்குழந்தை முகத்‌ திலும்‌ கலக்கம்‌. மெல்ல, அவளது மையிடப்பட்ட விழிக ளில்‌ இருந்து கருமையைக்‌ கரைத்துக்‌ கொண்டு கண்‌ ணீர்‌ ஓடிவருகிறது.

இது சுத்தமான பாசம்‌. பெற்றோரும்‌, மகளும்‌ ஒருத்த ருக்கொருத்தர்‌ பிரியும்‌ நேரத்தில்‌ கண்ணீர்‌ சொரியும்‌ அது உன்னதமான தருணம்‌. மீண்டும்‌ பார்த்துக்கொள்‌ எத்தான்‌ போகிறார்கள்‌ என்றாலும்‌.

'இதுவரை இருந்த மகள்‌ வேறு, இனிமேல்‌ இருக்கப்‌ போகிற மகள்‌ வேறு.

அந்த தாமரையை தாரைவார்த்துக்‌ கொடுக்கிற போது அம்மா, அப்பா, மகள்‌ என ஆறு கண்களிலிருந்தும்‌ ஆறாய்‌ கண்ணீர்‌.

இதுபாசச்‌ சுரப்பு

ஆனால்‌ மந்த்ர சம்ப்ரதாயம்‌ சொல்கிறது. இது அபசகு. ணமாம்‌. அதாவது பெற்றோரும்‌, பிள்ளையும்‌ தங்களது பாசத்தை வெளிக்‌ கொட்டும்‌ அந்த கண்ணீர்‌ அற்புத மான கவிதை.

இதை அபசகுணம்‌ என்று சொல்லியதோடு நிற்காமல்‌. இந்த அபசகுணம்‌ நீங்க வேண்டுமென்றால்‌.

என்ன பார்த்தோம்‌?... திருமணத்தருணத்தில்‌ அப்‌ பாவை பார்த்து மகள்‌ உகுக்கும்‌ பிரிவுக்‌ கண்ணீரைக்‌ கூட மதம்‌ சடங்காக்கி மந்த்ரமாக்கி வாத்யார்‌ உய்ய உத. வுகிறது.

இத்தனை நாள்‌ நெஞ்சுக்குள்‌ பொத்தி வைத்த பிஞ்சுத்‌ தென்றல்‌... இனிமேல்‌ இன்னொருத்தர்‌ வீட்டில்‌ வீசப்‌ போகிறதே... மணம்‌ பரப்ப வேண்டும்‌. அது சுகந்‌

தம்‌ சுமக்கவேண்டும்‌ என ஏங்கும்‌ அப்பாவின்‌ கண்கள்‌ கலங்குகிறது. அவளும்‌ அழுகிறாள்‌.

இங்கே தான்‌ நம்‌ சம்ப்ரதாயம்‌ சிரிக்கிறது. 'சுபமான இந்த காலகட்டத்தில எல்லாரும்‌ கண்களை துடைத்‌ துக்கொண்டு அழுவது கூடாது... இது அபசகுணம்‌ ஆகி விடும்‌.

இந்த அபசகுணம்‌ நீங்க வேண்டுமென்றால்‌... இந்தா இந்தமந்த்ரத்தை நான்‌ சொல்லச்‌ சொல்ல உச்சரி. நான்‌ ப்ரோக்ஷணம்‌ செய்கிறேன்‌.

(ப்ரோக்ஷ்ணம்‌ என்றால்‌ மந்த்ரத்தை உச்சரித்த படியே தூய்மையான தண்ணீரை தலையில்‌ தெளிப்பதுதான்‌) என்ன மந்த்ரம்‌?

"ஜீவாகும்‌ ௬தந்தி விமயந்தே அத்வரே தீர்க்காம்‌ அநுப்ரஸிதிம தீதியு நர வாமம்‌ பித்ருப்யய

இதம்‌ ஸமேநிரே மய பதிப்ய ஐய பரிஷ்வஜே..”

இந்த சடங்கு கண்ணீரால்‌ ஆனது. பாசத்தின்‌ பெருக்‌ கால்‌ அப்பாவும்‌, அம்மாவும்‌, மகளும்‌ கண்ணீர்த்துளி கள்‌ வடிக்க... அது தீதென்று மந்த்ரம்‌ புரோக்ஷக்கப்பட்ட வெறுந்தண்ணீரை தலையில்‌ தெளிக்கிறார்கள்‌. பாசக்‌ கண்ணீர்த்‌ துளிகளை விட... நமது மதம்‌ அந்த வெறும்‌ தண்ணீர்த்‌ துளிகளுக்கு தான்‌ முக்யத்துவம்‌ கொடுக்கி றது.

சரி அந்த மந்த்ரம்‌ என்ன சொல்கிறது? என்று பார்ப்‌ போம்‌!

"திருமணம்‌ என்றால்‌ என்ன... நம்‌ வீட்டில்‌ ஒரு சுபகாரி யம்‌ நடந்தால்‌... நமக்கு முன்‌ வாழ்ந்து விட்டுப்‌ போன நம்‌

முடைய முன்னோர்கள்‌. பித்ருக்கள்‌ அகமகிழ்ந்து ஆசீர்‌ வதிக்கும்‌ நாள்‌.

திருமணம்‌ எதற்காக?... அவளை கைப்பிடிக்கின்றானே மாப்பிள்ளை. அன்று முதல்‌ அவன்தான்‌ அவளுக்கு கணவன்‌. தன்னை கரம்‌ பற்றிய கணவனுக்கு உடலா லும்‌, உள்ளத்தாலும்‌, செய்கைகளாலும்‌ சுகமளிப்பதே அவள்பணி.

அவளை கட்டிப்பிடித்து ஆலிங்கணம்‌ செய்து... வள்ளு வன்‌ சொன்னது போல்‌... உனக்கும்‌ எனக்கும்‌ இடையே காற்று செல்லக்கூடாத இடம்‌ இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு நாம்‌ கட்டிப்பிடித்து... நம்‌ மூச்சுக்காற்றை சூடாக்க வேண்டும்‌.

இந்த வதூவரர்களின்‌ மணமக்களின்‌) சேர்க்கையை கன்னிகையின்‌ பெற்றோர்‌ நன்றாக நினைத்துப்‌ பார்க்‌ கட்டும்‌.

அழக்கூடாது. உங்கள்‌ கண்ணீர்த்துளியின்‌ பீடையை போக்கத்தான்‌ மந்திரம்‌ கலந்த இந்த தண்ணீர்த்துளி,

அடுத்த சடங்கு?.

திருமணம்‌ முடிந்து வழியனுப்பும்‌ போது வழியும்‌ பாசக்‌ கண்ணீரை தீட்டாகப்‌ பார்க்கிறது நமது மத சம்ப்ரதா யம்‌... என்பதை இதுகாறும்‌ பார்த்தோம்‌.

திருமணம்‌ என்றாலே நம்‌ எல்லோரின்‌ நினைவிற்கு. வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது. மாங்கல்யம்‌ தந்துநாநேந மமஜீவந ஹேதுநா கண்ட்டே பத்நாமி ஸுபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்‌. டி.வி. சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும்‌ கல்யாணம்‌ என்றாலே... இந்த சுலோகம்தான்‌ ஒலிக்கி றது. இதை வைத்து தாலி கட்றான்‌ என அடையாளப்‌ படுத்துகிறார்கள்‌.

இந்த சுலோகத்துக்கு வயது என்ன?... என்ன என்று பார்த்தால்‌... வேத காலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை.

மாங்கல்ய தாரணம்‌ அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில்‌ மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.

அதனால்‌ இந்த சுலோகம்‌ நுழைக்கப்பட்டது. கட்டப்பட டது. சரி இதற்கு என்ன அர்த்தம்‌?

"இது மங்கள சூத்ரம்‌. நான்‌ ஜீவித்திருப்பதற்கு ஏதுவா னது. இதை உன்‌ கழுத்தில்‌ கட்டுகிறேன்‌. ஸெளபாக்ய வதியே... நீ நூறு வருடங்கள்‌ சுகமாய்‌ வாழ்ந்திருப்பா யாக... என்பது தான்‌ இதன்‌ அர்த்தம்‌.

இதன்‌ பிறகு நடப்பது தான்‌ பாணிக்ரஹணம்‌: அதாவது "கைத்தலம்‌ பற்ற கனா கண்டேன்‌ தோழீ... -என ஆண்‌ டாள்‌ சொன்னாரே... அந்த கைத்தலம்தான்‌ பாணிக்ர ஹணம்‌.

அதாவது மணமகன்‌ இருக்கிறானே... அவன்‌ தனது. வலது கையை தாழ்த்தி மேலே குவிந்துள்ள மணப்‌ பெண்ணின்‌ வலது கையை அப்படியே கொத்தாகக்கவ்‌ விப்பிடிக்க வேண்டும்‌. அதாவது எல்லா விரல்களையும்‌ சேர்த்து ஸ்பரிசம்‌ பண்ண வேண்டும்‌.

இப்படி கையைப்‌ பிடிக்கும்‌ போது வாத்யார்‌ கடகட வென 4 மந்த்ரங்களை நாக்கை சுழட்டி சுழட்டி சொல்லி. முடித்து விடுவார்‌. இதுவும்‌ ஒரு சடங்காம்‌.

அந்த சடங்கின்‌ 4 மந்த்ரங்கள்‌ என்ன?... பார்த்து விடு வோம்‌.

முதல்மந்த்ரம்‌.

க்ருப்ணாமிதே ஸுப்ரஜாஸ்த்வாயஹஸ்தம்‌

மயாபத்யா ஜரதஷ்ஷர்‌ யதாஸ பகோ அர்யமா

ஸமிதா புரந்திர்‌ மஹ்யம்‌ த்வாதுர்‌

கார்ஹபத்யாய தேவா.

அடியே... உன்னை என்‌ வீட்டின்‌ தலைவியாக இருக்‌ கும்‌ பொருட்டு பகன்‌, அர்யமா, ஸமிதா, இந்திரன்‌ ஆகிய தேவர்கள்‌ உன்னை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்‌. நீ என்னோடு இணைந்து நல்ல பிள்ளைகளைப்‌ பெற்றுக்‌ கொடு.

கிழத்தனம்‌ அடையும்‌ வரை என்னுடன்‌ இருந்து. என்னை ஆதரி... காதலி ... அதனால்தான்‌ நான்‌ உன்னை கைப்பிடிக்கிறேன்‌. விரல்‌ சேர்க்கிறேன்‌. இரண்டாவது மந்த்ரம்‌”.

தேஹபூர்வே தநாஸோ யத்ர பூர்வவஹோ

ஹிதா: மூர்த்தந்வாத்‌ யத்ர ஸெளப்ரவ பூர்வோ

தேவப்ய ஆதபத்‌

முன்சொன்ன மந்த்ரத்தில்‌ சொன்னேன்‌ இல்லையா நான்கு தேவ புருஷர்கள்‌ அவர்களுக்கு அக்னி அல்‌ லது சூரியன்‌ இவ்விருவரில்‌ யார்‌ தலைவனாக விளங்கி னாரோ அவர்தான்‌ உன்னை எனக்கு கொடுத்தார்‌.

ஆக முதல்‌ மந்த்ரத்துக்கும்‌ இரண்டாவது மந்த்ரத்துக்‌ கும்‌ சிறு முரண்பாடு மூள்கிறது.

உன்னை எனக்கு யார்‌ கொடுத்தார்‌ என்றால்‌ அந்த தேவர்‌ கொடுத்தார்‌, இந்த தேவர்‌ கொடுத்தார்‌ என மணமகன்‌ சொல்வதாக வாத்யார்‌ மந்த்ரம்‌ முடைகிறார்‌. பக்கத்தில்‌ தான்‌ மணப்பெண்ணின்‌ அப்பா இருக்கிறார்‌. "அடப்பாவி மாப்பிள்ளையே... இந்த புஷ்பகுமாரியை, லட்டு பெண்ணை, அழகிய மணப்பெண்ணை நான்தா னடா உனக்கு கொடுத்தேன்‌... என அவர்‌ சொல்ல மாட்‌ டார்‌. ஏனென்றால்‌ அவருக்கு இந்த மந்த்ரத்தின்‌ அர்த்‌ தம்‌ தெரியப்போவதில்லையே.

சரி அடுத்த இரண்டு மந்த்ரங்கள்‌ என்ன?... கல்யாணப்‌ பந்தலிலே காத்திருங்கள்‌.

பாணிக்ரஹன மந்த்ரங்களை பார்த்து வருகிறோம்‌. இது வரை இரண்டுமந்த்ரங்கள்‌ பார்த்தோமா?.

அதாவது மாப்பிள்ளை தனது வலது கையால்‌... பெண்‌ ணின்‌ வலது கை ரேகைகளை ஊடுருவி விரல்களை வளைத்து... ஒரு கையளவு ஆலிங்கனம்‌ செய்வதுதான்‌ பாணிக்ரஹணம்‌.

முதல்‌ இரு மந்த்ரங்களில்‌... தனது மாமனார்‌ தனக்கு கொடுத்த அப்பெண்ணை... வேறு யாரோ கொடுத்தது போல காட்டிக்‌ கொள்கிறது சம்ப்ரதாயம்‌.

சரி அடுத்த மந்த்ரங்களை பார்க்கலாமா? ஸரஸ்வதிப்ரேதமவ ஸீபகே வாஜிநீவதி

தாம்‌ த்வா விஸ்வஸ்ய பூதஸ்யப்ரகாயாமஸ்யக்நத: ஸரஸ்வதி தேவியே... நீ எப்படிப்பட்ட சரஸ்வதி தேவி யென்றால்‌... நல்ல பாக்யம்‌ உள்ளவரும்‌ அன்னம்‌ மற்‌ றும்‌ ஸ்தோத்ரங்களால்‌ நிரம்பியவருமான சரஸ்வதிதே வியே... எங்களை நன்றாக ரசுஷிக்க வேண்டும்‌. இவனை இப்பெண்ணை நீநன்றாக பாதுகாக்க வேண்டும்‌.

இந்த உலகப்‌ பிராணிகளுக்கு பொதுவாக சொல்கி றோம்‌... நீ எங்களை நல்லபடியாக காப்பாற்றுவதற்காக உன்னை ஸ்தோத்ரம்‌ செய்தபடியே இருப்போம்‌. அடுத்தது...?

ஏதி ப்ரதிசஸ்‌ ஸர்வா தசாசநுபவமாந

ஹிரண்ய ஹஸ்த ஜரம்மஸ்‌ ஸத்வா மந்மநஸம்‌ க்ரு ணேத.

காற்றானது உலகத்தின்‌ மூலை முடுக்குகளில்‌ எல்‌ லாம்‌ பரவிக்‌ கிடக்கிறது. நீ இதுவரை இருந்த இடத்தையும்‌, நான்‌ இதுவரை இருந்த இடத்தையும்‌ காற்று தேவன்தான்‌ நிரப்பியிருந்தான்‌. அதாவது எங்கோ மூலை முடுக்குகளில்‌ இருந்த நம்மை இணைத்தவன்‌ காற்று தேவன்‌. அந்த வாயுதேவன்‌ தான்‌ உன்னையும்‌. என்னையும்‌ உன்‌ மூச்சையும்‌ என்‌ மூச்சையும்‌ இணைத்‌ துள்ளான்‌ என காற்றை போற்றுகிறது.

கைத்தலம்‌ பற்றும்போது இந்த மந்த்ரங்கள்‌ வாத்யார்க ளால்‌ ஜெட்‌ வேகத்தில்‌ உச்சரிக்கப்படும்‌. இதன்‌ அர்த்‌ தத்தை புரிந்து கொண்டீர்களா?

அடுத்தது?.

பாணிக்ரஹணம்‌ அதாவது கைப்பிடித்தல்‌ நடந்தவுடன்‌. அப்படியே மணப்பெண்ணின்‌ வலதுகையை தன்‌ வலது கையால்‌ அனைத்து விரல்களையும்‌ அணைத்துப்‌ பிடித்‌ 'தபடிபையன்‌ எழுந்திருக்க வேண்டும்‌.

பிறகு அக்னிக்கு வலதுபுறமாக... பெண்ணின்‌ வலது காலை ஒவ்வொரு அடியாக மணப்பையனே எடுத்து வைக்கவேண்டும்‌. இவ்வாறு 7 அடிகள்‌ எடுத்து வைப்ப தற்கு பெயர்தான்‌ சப்தபதி.

என்னென்ன.

ஏ... பெண்ணே உன்‌ வாழ்க்கையில்‌ அன்னம்‌ குறையா மல்‌ எப்போதும்‌ சோறுடைத்து வாழ்வதற்காக நீ முதல்‌ அடி வைக்கிறாய்‌. அந்த அடியில்‌ விஷ்ணு உன்னை பின்‌ தொடர்வார்‌.

இரண்டாவது அடி எடுத்து வைக்கிறாய்‌. எதற்காக? அதே விஷ்ணு உன்‌ தேகத்தில்‌ புஷ்டி ஏற்படுவதற்காக

உன்னை பின்‌ தொடர்கிறார்‌ அந்த அன்னம்‌ செரிப்பதற்‌ காக.

நீ சகலவிதமான வ்ரதங்களையும்‌ அனுஷ்டிக்க வேண்‌ டுமல்லவா. அதற்காக மூன்றாவது அடி?

உனக்கு நல்ல சுகத்தை கொடுப்பதற்காக விஷ்ணு உன்னை ஃபாலோ பண்ண வேண்டுமே... குடும்பம்‌ சந்‌ தோஷமாக இருக்க... அதற்காக இந்த அடி.

உனக்கு மனிதர்கள்‌ மட்டுமல்ல... விலங்குகளாலும்‌ நன்‌ மைகள்‌ கிடைக்க வேண்டும்‌. உன்னிடம்‌ பசுக்கள்‌ முத லான ஜீவன்கள்‌ விருத்தியடைய வேண்டும்‌ என்பதற்‌ காக இந்த 5ம்‌ அடி.

நீ ஆறாவது அடியை எடுத்து வைக்கும்போது எல்லாவி தமான ருதுக்களும்‌ உனக்கு அனுகூலமாகும்படி அமை யும்‌,

நீ வைக்கின்ற இறுதி அடி. இவை அனைத்தையும்‌ சேர்ந்து பெற! உன்‌ வாழ்க்கையில்‌ நீ நிறைவேற்ற வேண்டிய ஹோமங்களை எந்த குறையும்‌ இன்றி நிறை வேற்றுவதற்காக விஷ்ணு உன்னை பின்‌ தொடர்கிறார்‌. ஏழு அடிகளைத்‌ தாண்டி முடித்து விட்டாள்‌ மணப்‌ பெண்‌.

அடியே... நீ அடியடியாய்‌ எடுத்து வைத்தாயே. எதற்‌ கென்று தெரியுமா என கேட்டால்‌... வாத்யார்‌ சொன்‌ னார்‌. நான்‌ அடியெடுத்து வைத்தேன்‌ என்கிறாள்‌. வாத்‌ யார்கள்‌ இதுபோல்‌ அர்த்தங்களை விளக்குவதில்லை. ஏழு அடிகள்‌ தாண்டி முடித்தவுடன்‌ * "ஸகா ஸப்தபதா பவ... ஏஹி ஸீத்ருதே...” என்ற நீண்ட மந்த்ரத்தை மணப்‌. பையன்‌ சொல்கிறான்‌.

இதற்கென்ன அர்த்தம்‌: "ஏழு அடிகளை தாண்டிய நீ எனக்கு தோழியாக வேண்‌ டும்‌. நாம்‌ இனி நண்பர்கள்‌. உன்னுடன்‌ நான்‌ நட்பு கொள்கிறேன்‌.

நம்‌ விருப்பங்கள்‌ இனி ஒன்றாக இருக்கட்டும்‌. நல்ல அன்புள்ளவர்களாயும்‌, ஒருவருக்கொருவர்‌ பிடித்த முள்ளவர்களாகவும்‌ இருப்போம்‌..”

என்பதே

பண்பும்‌ பயனும்‌ அது..." -இந்தக்‌ குறள்‌ கூறும்‌ பொரு ளுக்கும்‌ அதற்கும்‌ தொடர்பு உண்டோ. சிந்தித்துக்‌ கொண்டிருங்கள்‌.

அன்பு என்னும்‌ பண்பாட்டின்‌ அடிப்படையில்‌ மனிதகுல வரலாற்றில்‌ முக்யத்துவம்‌ பெற்ற திருமணத்தைப்பற்றி வேதம்‌ விஸ்தாரமாகப்‌ பேசுகிறது.

வேதக்‌ கருத்துகள்‌ வளரும்‌ காலத்தில்‌ ஒரு ஆணையும்‌, ஒரு பெண்ணையும்‌ சேர்த்து ஒரு சமுதாயத்தை உண்டு

பண்ணும்‌ பழக்கம்‌ இருந்து வந்திருக்கிறது. இது சம்பந்‌ தமான கருத்துக்கள்‌ ஆங்காங்கே வேதத்தில்‌ வெளிச்‌ சப்படுகின்றன.

ஒரு பெண்‌ ஒரிடத்தில்‌ பிறக்கிறாள்‌. ஒரு ஆண்‌ வேறிடத்‌ தில்‌ பிறக்கிறான்‌. இவர்கள்‌ இருவரையும்‌ இயற்கை ஒன்‌ நாகச்‌ சேர்த்து வைக்கிற நிகழ்வுதான்‌ திருமணம்‌, கல்யா ணம்‌.

ஜன ஒற்றுமைக்காகத்‌ தான்‌ கல்யாணம்‌ என்ற பந்தக்‌ கயிறு கட்டப்பட்டது என்பதை வேதங்கள்‌ கதை சொல்‌ லிக்‌ காட்டுகின்றன.

வேதம்‌ சொல்கிறது “டேய்‌... நீ இந்தப்‌ பெண்ணை உனது அந்தரங்க தோழியாக நினைத்து மனம்‌ விட்டுப்‌ பேச வேண்டும்‌"

"ஸ்நேகிதனே... ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே...' என இப்போது திரைப்படப்‌ பாடல்களை என்‌ பேரன்‌, பேத்திகள்‌ முணுமுணுக்கிறார்கள்‌.

ஆனால்‌ வேதமோ பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே.

"ஸ்த்ரீனானந்த ரகஸ்யஸ்னேகஸ்ய...' என்கிறது. எப்படி?... உங்கள்‌ இருவருக்கும்‌ இன்று முதல்‌ சமுதா யத்தில்‌ ஒரு அந்தஸ்தை கொடுக்கிறோமே... குடும்பத்‌ தில்‌ இனி இருவருடைய செயல்களும்‌, எண்ணங்களும்‌ அன்பின்‌ அடிப்படையில்‌ இணைந்திருக்க வேண்டும்‌.

நீ அவளை அந்தரங்கத்‌ தோழியாக பாவிக்க வேண்டும்‌. அவள்‌ உன்னை அந்தரங்க நண்பனாக பாவிக்க வேண்‌

டம்‌.

இதுபற்றி வேதத்தில்‌ நூற்றுக்கணக்கான மந்த்ரங்கள்‌ காணப்படுகின்றன.

இப்படி கல்யாணத்தைப்‌ பற்றி நான்‌ எழுதிவரும்‌ வேளையில்‌ அடியேன்‌ க்ருஹத்திற்கு ஒரு சந்தேகஸ்தர்‌ வந்தார்‌.

"வேறெதற்கு, சந்தேகம்‌ கேட்கத்தான்‌. நான்‌ ஒரு கல்‌ யாணத்துக்குப்‌ போயிருந்தேன்‌. மணமேடையில்‌ குமா ரனும்‌, குமாரியும்‌ அமர்ந்திருக்க எதிரில்‌ புகை கக்கிக்‌ கொண்டிருந்தது ஹோமகுண்டம்‌.

இன்று முதல்‌ வாழ்க்கையில்‌ புதுவசந்தம்‌ வீசப்போகி றது என நினைத்து முறுவலோடுதான்‌ மேடைக்கு வந்த னர்‌ இருவரும்‌. ஆனால்‌... மாப்ளை கண்ணும்‌ கலங்க... பெண்‌ கண்ணும்‌ கலங்க... நடத்தி வைக்கும்‌ வாத்யார்‌ கண்ணும்‌ கலங்க... மண்டபமெல்லாம்‌ கண்ணீர்தான்‌. சின்னப்‌ பிள்ளைகள்‌ பாவம்‌ ஓ... வென அழ ஆரம்பித்து விட்டன. எனக்குத்‌ தெரியவில்லை. ஏன்‌ இந்த அக்னி?. கல்யாணத்தில்‌ ஏன்‌ கண்ணில்‌ புகையள்ளிக்‌ கொட்டு கிறார்கள்‌. வாழ்க்கை என்னும்‌ ரயில்‌ வண்டி புறப்படும்‌. போதே இவ்வளவு புகையா?... தண்டவாளமே காணா மல்‌ போகும்‌ அளவுக்கு கண்ணை மறைக்கும்‌ புகையை கிளப்பும்‌ இந்த அக்னி ஏன்‌?.

வந்த சந்தேகஸ்தர்‌ வர்ணனைகளாகவே கேள்வி கேட்‌ டார்‌

அப்படி வளரும்‌ அக்னியின்‌ முன்பு இப்போது பதில்‌ சொல்கிறேன்‌ நீங்களும்‌ கேட்டுக்‌ கொள்ளுங்கள்‌. ஆதிகாலத்தில்‌ திருமணத்தில்‌ நெருப்பில்லை. வேத காலத்தில்‌ விவாஹம்‌ என்பது தூக்கிக்‌ கொண்டு ஓடும்‌ நிகழ்வாக இருந்தபோதும்‌... "அக்னியன்றி, புகையின்றி

கல்யாணம்‌ ஒன்று செய்குவோம்‌' என்பதுதான்‌ வேதக்‌ கல்யாணம்‌.

மந்த்ரங்கள்‌ கருத்தை போதிக்கும்‌ எந்திரங்களாகத்‌ பிற்காலத்தில்‌ வேதத்துக்குபின்‌. இதை அக்னி தத்துவத்தோடு சேர்த்து விட்டார்கள்‌.

எப்படி? இதை செய்த சூத்திரக்காரர்களே பச்சை யாக சொல்கிறார்கள்‌. சூத்திரக்காரர்கள்‌ என்றால்‌ சத்தி ரத்தை உபதேசித்தவர்கள்‌.

"வேத மந்த்ரங்கள்‌ பிரார்த்தனை, போதனை என்ற அள. வில்தான்‌ இருக்கின்றன. இதை வெறுமனே வைத்துக்‌ கொண்டுநாம்‌ என்ன செய்யமுடியும்‌?.

அக்னியில்‌ ஹோமம்‌ பண்ணி நன்மைகளை பெற வேண்டும்‌ என பழக்கம்‌ வந்தால்‌ சடங்குகள்‌ இன்னும்‌ கூடுமே. சும்மா... வாழ்க்கை முறையைப்‌ பற்றிச்‌ சொல்‌ லும்‌ மந்த்ரங்களை மட்டுமே சொல்லிக்‌ கொண்டிருந்‌ தால்‌ பிழைப்பு என்னாவது.

அதற்காக "ஸ்வாஹா... என மந்த்ரங்களை பின்னி. புதிய பண்பாட்டை வளர்த்து விட்டோம்‌" என்கிறார்கள்‌ சூத்திரக்காரர்கள்‌.

இதன்படி.

ஆணுக்கும்‌ பெண்ணுக்கும்‌ உள்ள உறவை வலியுறுத்‌ தும்‌, நெறிப்படுத்தும்‌ மந்த்ங்களை சொல்ல வேண்டிய அவசியம்‌ கிடையாது. இருந்தும்‌, அக்னியில்‌ ஹோமம்‌ பண்ணும்போது... வேறு மந்த்ரங்களில்‌ உள்ள சில கருத்தை மட்டும்‌ சேர்த்து சடங்குகளைக்‌ கட்டி விட்டார்‌ கள்‌. இந்த சடங்குகளுக்கும்‌ அவர்கள்‌ கூறும்‌ மந்த்ரங்க ளுக்கும்‌ நேருக்கு நேர்‌ சம்பந்தமே கிடையாது. இப்போது தெரிகிறதா?... மணப்பெண்‌ மணமகன்‌ முன்னே எப்படி அக்னி வளர்ந்தது என்று!.

கல்யாணத்தில்‌ அக்னி வளர்ந்த கதையையும்‌, அதன்‌ மூலம்‌ சடங்குகள்‌ ஒளி பெற்றதையும்‌ பார்த்தோம்‌. சடங்குகள்‌ எவ்வளவு மூடத்தனமாக இருக்கின்றன என்பதற்கு உதாரணங்களை பார்த்து வந்தோம்‌.

இதில்‌ முழு முதல்‌ மூடத்தனமான சடங்கு ஒன்றை இப்‌ போது பார்க்கலாம்‌. அதாவது நம்மூர்‌ எலிமெண்ட்ரி ஸ்கூல்களில்‌ "ஈயடிச்சான்‌ காப்பி... என ஒரு வழக்கு மொழிஉண்டு.

அதென்ன ஈயடிச்சான்‌ காப்பி? ஒரு மாணவன்‌ பக்கத்‌ திலிருக்கும்‌ படித்த மாணவனைப்பார்த்து காப்பியடித்து விடுகிறான்‌. எப்படி தெரியுமா?.

ஒரு வாக்கியத்தை எழுதும்போது அதில்‌ ஒரு வார்த்‌ தையை தவறாக எழுதிவிட்டதால்‌ அதை அடித்து விட்டு திருத்தி எழுதியிருப்பான்‌ அம்மாணவன்‌. இதைப்‌ பார்த்து எழுதுகிற மாணவனும்‌... அதே போல தவறாக எழுதி அடித்து விட்டு மறுபடியும்‌ சரியாக எழுதுவான்‌. அதாவது காப்பியடிப்பதில்கூட புத்திசாலித்தனம்‌ காட்‌

டாமல்‌ எழுத்துக்கு எழுத்து அப்படியே காப்பியடிப்பதற்கு பெயர்தான்‌ "ஈயடிச்சான்‌ காப்பி:

இதே தான்‌ விவாஹ விஷயத்திலும்‌! விவாஹம்‌ என்ற சொல்லுக்கு நாம்‌ என்ன அர்த்தம்‌ பார்த்தோம்‌. தூக்‌ கிக்கொண்டு ஓடுதல்‌ என்பது. அதாவது அந்த காலத்‌ தில்‌... மனதுக்குப்‌ பிடித்தவளை தூக்கிக்‌ கொண்டு போதல்தான்‌ விவாஹத்தின்‌ ஆரம்பம்‌. விவாஹம்‌ என்ற சொல்லே தூக்கிக்கொண்டு ஓடுவதுதான்‌. அதற்குப்‌ பிறகு வேதங்கள்‌ மந்த்ரங்களால்‌ மணமேடை அமைத்‌ தன. அதற்கும்‌ பின்னர்‌ ஆத்திரக்காரர்கள்‌... அக்னி வளர்த்து அதில்‌ மேலும்‌ பல சடங்குகளைக்‌ கட்டினார்‌ கள்‌.

இன்றும்‌ "விவாஹ சுபமுகூர்த்தப்‌ பத்திரிகை' என அச்‌ சடிக்கிறார்கள்‌. எவனாவது சுபமுகூர்த்தம்‌ பார்த்து தூக்‌ கிக்கொண்டு ஓடுவானா?... அப்பா வெளியே போயிருக்‌ கும்‌ நேரம்‌ பார்த்து... அம்மா உள்ளே சமையலோ வேறு ஏதோ காரியமாய்‌ இருக்கும்‌ நேரம்‌ பார்த்து. வீட்டுப்பக்கம்‌ வந்து கண்‌ ஜாடை காட்டி காத்திருக்கும்‌ காதலியை டூவீலரிலோ, ஆட்டோவிலோ, காரிலோ ஏற்‌ நிச்சென்றால்‌ அதுதான்‌ விவாஹம்‌. அதுகூட முழுமை யான விவாஹம்‌ அல்ல. அந்தக்‌ காலம்‌ போன்று அந்‌ தபருவ மங்கையின்‌ மெல்லிடையை முறிந்து விடாமல்‌ பிடித்து வாளிப்பான கால்களில்‌ தன்‌ கரம்‌ பற்றி அலேக்‌ காக அந்த பருவப்‌ பதார்த்தத்தை தன்‌ உள்ளங்கையா லும்‌ உடம்பாலும்‌ தாங்கிக்கொண்டு ஓடினால்தான்‌ அது விவாஹம்‌.

இப்போதெல்லாம்‌ அப்படி செய்ய முடிகிறதா... சினிமா வில்‌ வில்லன்களும்‌, நிஜத்தில்‌ ரவுடிகளும்தான்‌ இப்படி "விவாஹம்‌: செய்கிறார்கள்‌.

'இப்படியொரு விவாஹத்தை பகவான்‌ கிருஷ்ணனும்‌ செய்திருக்கிறார்‌... எங்கே?

பீஷ்மகன்‌ என்னும்‌ மன்னன்‌ தன்‌ மகள்‌ ருக்மணிக்கு: மணம்‌ முடிப்பதற்காக பல்வேறு நாட்டு ராஜாக்களை அழைத்திருக்கிறான்‌. ராஜசபையில்‌ சுயம்வரம்‌. எல்லா தேசத்து ராஜாக்களும்‌ குழுமியிருக்கிறான்‌.

ருக்மணி என்னும்‌ மலர்‌... யார்‌ கழுத்தில்‌ மாலை யிடப்‌ போகிறாளோ? அவன்தான்‌ ருக்மணியை கூடிக்‌ கொள்ளும்‌ பேறு பெறுவான்‌. ருக்மணியின்‌ அண்ணன்‌ ருக்மியோ, தன்‌ தங்கையை கிருஷ்ணனின்‌ அத்தைப்‌ பிள்ளை சிசுபாலனுக்கு கொடுக்க முடிவு செய்திருந்‌ தான்‌. எல்லா மன்னர்களும்‌ வந்து என்ன பிரயோஜனம்‌. சுயம்வர நாயகிருக்மணி...?

முதல்நாள்‌ இரவே... ஒரு பிராமணன்‌ மூலமாக தூது அனுப்பப்படுகிறது. "பக்கத்திலுள்ள கோயிலுக்கு வந்து விடு. நான்‌ காத்திருக்கிறேன்‌ இதுதான்‌ பிராமணன்‌ விடு தூது சொன்ன செய்தி.

ருக்மணி கோயிலுக்கு வந்தாள்‌. கிருஷ்ணனும்‌ வற்‌. தான்‌. தன்‌ ரதத்தில்‌ தூக்கிச்சென்றுவிட்டான்‌.

இது கதை... இதில்‌ கிருஷ்ணன்‌ செய்தானே அது விவா ஹம்‌.

இன்றும்‌ செய்கிறார்கள்‌... என்னுடைய புத்ரியான செளபாக்யவதி புஷ்பாவை (ஒரு பெயருக்கு வைத்‌ துக்கொள்ளுங்கள்‌) ஸ்ரீ ராமசாமியின்‌ புத்ரன்‌ சிரஞ்சீவி முரளி நிகழும்‌ விய வருஷம்‌ தை மாசம்‌ 10-ந்தேதி காலை: 9,00.க்கு மேல்‌ 10.00-க்குள்‌ சுபயோக சுபதினத்தில்‌ தூக்‌ கிக்கொண்டு ஓடப்போகிறான்‌.

தேவரீர்‌ குடும்பத்தோடு வந்திருந்து அவன்‌ என்‌ பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடுவதைப்‌ பார்த்து அட்‌ சதை போட்டு ஆசிர்வதிக்க வேண்டும்‌ -என்று கல்யா ணப்‌ பத்திரிகை அடித்தால்‌ விவாஹ முகூர்த்தம்‌ என்ப தற்கு பொருத்தமாக இருக்கும்‌.

சரி அந்த ஈயடிச்சான்‌ காப்பி சடங்குதான்‌ என்ன?

இன்று நாள்பார்த்து, நட்சத்திரம்‌ பார்த்து, ஆள்‌ பார்த்து, குடும்பம்‌ பார்த்து, பையன்‌ என்ன வேலை பார்க்கிறான்‌ என பார்த்து, மண்டபம்‌ பார்த்து, வாத்யம்‌ பார்த்து, எந்த சமையல்காரனிடம்‌ கொடுத்தால்‌ விருந்து சுவையாக இருக்கும்‌ என விசாரித்துப்‌ பார்த்து.

இத்தனையும்‌ பார்த்து கல்யாணம்‌ பண்ணிவிட்டு 'தூக்‌ கிக்‌ கொண்டு ஓடறான்‌' என சொல்வது முட்டாள்தனம்‌ அல்லவா...

இந்த முட்டாள்தனத்தை நியாயப்படுத்துவதற்காகவே ஒரு சடங்கும்‌ பின்னப்பட்டது. அது என்னவென்றால்‌. மணப்பெண்ணின்‌ மாமா பெண்ணை தன்‌ தோளில்‌ தூக்கிக்கொள்கிறார்‌. மணமகளின்‌ மாமா அவனைத்‌ தன்‌ தோளில்‌ தூக்கிக்‌ கொள்கிறார்‌. ரெண்டுபே

ரும்‌ மணமகளையும்‌, மகனையும்‌ தோளில்‌ தூக்கிக்‌ கொண்டு... அந்த சிறு பரப்பு கொண்ட மணமேடையில்‌ இப்படியும்‌ அப்படியுமாய்‌ நகர... அப்போது மாலை மாற்‌ றிக்‌ கொள்கிறார்கள்‌. இதுதான்‌ விவாஹமாம்‌. அதாவது தூக்கிக்கொண்டு ஓடுவதாம்‌.

அடப்பாவிகளா?... வீரத்தை இப்படியா கேவலப்படுத்து. வது. அந்தக்‌ காலத்தில்‌ அவனுக்கு தேவையிருந்தது. பெண்ணை தூக்கிக்‌ கொண்டு ஓடினான்‌.

இன்றுதான்‌ அதற்குத்‌ தேவையில்லையே. பின்‌ ஏன்‌ விவாஹம்‌ என வைத்து தூக்கிக்கொண்டு ஓடுவதைப்‌ போல பாவலா செய்கிறீர்கள்‌. இதற்கு வாத்யார்‌ மந்த்ரம்‌ வேறு ஒதுகிறார்‌. இது ஒன்று என்றால்‌... இன்னொரு மூடச்சடங்கு,

இதுபற்றி நான்‌ இந்துமதம்‌ எங்கே போகிறது. முதல்‌ பாகத்திலேயே சொல்லியிருப்பேன்‌. இருந்தாலும்‌ இங்கே விவாஹத்தைப்‌ பற்றி குறிப்பாகப்‌ பார்ப்பதால்‌ அதைசற்றே நினைவு கூர்கிறேன்‌.

கல்யாணத்தில்‌ பெண்‌ நன்றாக இல்லை, மாப்பிள்ளை நன்றாக இல்லை... என்றால்‌ கூட பிரச்சினை வராது. ஆனால்‌... சாப்பாடு நன்றாக இல்லை என்றால்‌ போரே வெடிக்கும்‌. இதனால்‌ விருந்தோம்பலை தமிழ்ப்பண்‌ பாடு காலச்சிறப்பாகச்‌ செய்தது: செய்து வருகிறது. இப்போதைய கல்யாணச்‌ சடங்குகளே... தமிழர்களின்‌ தாராள விருந்தோம்பலுக்கு சாட்சி.

கல்யாணத்தில்‌ தேங்காய்‌ உருட்டுவதைப்‌ பார்த்திருப்‌ பீர்கள்‌. மணப்பெண்ணும்‌, மணாளனும்‌ பந்து உருட்டு வதுபோல்‌ தேங்காய்களை உருட்டிக்கொண்டிருப்பார்‌

கள்‌. இது ஒரு சடங்கு... இதற்கொரு விளக்கமா?... என்று